கொழும்பு பல்கலைக்கழகம் 17 ஆண்டுகளாக நடத்திய ஆராய்ச்சியில் வெற்றி!

புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடிப்பதில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் வெற்றி கண்டுள்ளது.

புற்றுநோய் என்பது மனித உயிருக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு நோய். ற்போது சிறுவர்கள் உட்பட வயது வேறுபாடின்றி புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் அதிகமாகி வருகின்றனர்.

இதனால் தான் உலகம் இப்போது அதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது.

மனித உடலின் ஒரு பகுதியில் அசாதாரண செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி புற்றுநோய் என்று அழைக்கப்படுவதுடன், அது ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.

உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 மில்லியன் மக்கள் புற்றுநோயால் உயிரிழப்பதுடன், இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் உயிரிழப்புக்களின் எண்ணிக்ளை 15,000 முதல் 20,000 வரை காணப்படுகிறது.

புற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், என்டோரோமைக்ஸ் எனப்படும் வெற்றிகரமான புற்றுநோய் தடுப்பூசியை தயாரிப்பதில் ரஷ்யா சமீபத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்தது.

இந்த சூழலில், 2008 முதல் சுமார் 17 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது.

புற்றுநோய் செல்களைக் கொல்லும் இந்த ஊட்டச்சத்து மருந்து, மூலக்கூறு உயிரியல் மற்றும் நெட்வொர்க் மருந்தியல் போன்ற நவீன அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி 05 மருத்துவ தாவரங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.

வெர்னோனியா ஜெய்லானிகா, ( Vernonia zeylanica) நிஜெல்லா சாடிவா, (Nigella sativa) ஹெமிடெஸ்மஸ் இண்டிகஸ், (Hemidesmus indicus) லூகாஸ் ஜெய்லானிகா (Leucas zeylanica) மற்றும் ஸ்மைலாக்ஸ் கிளாப்ரா (Smilax glabra) ஆகிய தாவரங்களிலிருந்து பெறப்பட்ட மருந்துகளின் கலவையானது புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடும் என்று பேராசிரியர் சமீரா ஆர். சமரக்கோன் உள்ளிட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ள குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!