4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டிகளில், ஆண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் விக்னராஜ் வக்ஷன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

2025 தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகள் இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்று வருகின்றது.
ஆண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் 14 நிமிடங்கள் 23.21 வினாடிகளில் போட்டித் தூரத்தை ஓடி முடித்து விக்னராஜ் வக்ஷன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இது இந்த சாம்பியன்ஷிப்பில் இலங்கை வென்ற முதல் பதக்கமாகும்.
