கனடாவில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண்ணுக்கு கிடைத்த கௌரவம்!

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றிஸ் நகர சபைக்கு இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மிலானி தியாகராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மொன்றியல் நகரில் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக நகர சபைக்கு தெரிவான முதல் தமிழ் பெண் அரசியல்வாதி மிலானி தியாகராஜா.

கனடா சேவை மையத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றிய இவர், மக்களுக்கு சேவை செய்வதில் நீண்ட அனுபவம் பெற்றவர்.

யாழ்ப்பாணம் நல்லூரை பூர்வீகமாகக் கொண்ட சட்டத்தரணியான லிங்கராஜா தியாகராஜா மற்றும் சண்டிலிப்பாயைச் சேர்ந்த பாமதி சிவபாதம் ஆகியோரின் மகளே மிலானி தியாகராஜா.

கனடாவின் கோட் டெஸ்-நெய்ஜ் பகுதியில் பிறந்து வளர்ந்த மிலானி தியாகராஜா தமது கடின முயற்சியால் இந்நிலைக்கு உயர்ந்துள்ளார்.

தனது வெற்றியையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மிலானி தியாகராஜா, “இது ஒரு வெற்றி மட்டுமல்ல, ஒரு புதிய தொடக்கம்.

டார்லிங்டனில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரின் குரலும் மதிக்கப்படும், பிரதிநிதித்துவப்படுத்தப்படும் என்பதை உறுதிசெய்கிறேன்.

நமது சமூகத்தின் இணைப்பை வலுப்படுத்தியே இந்தப் பணியை மேற்கொள்வேன்.

நகரத்தின் தூய்மை மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்தல், மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்தல். வீடற்றவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

weather
சூறாவளியாக மாறும் காற்றழுத்தம்: வளிமண்டலவியல் திணைக்களம்
AL exam
2025 உயர்தரப் பரீட்சை: வெளியான முக்கிய அறிவிப்பு
Vignaraj Vakshan
தெற்காசிய மெய்வல்லுநர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழன்!
srilankans
வெளிநாடொன்றில் சிக்கிய இலங்கையர்கள்: வெளியான தகவல்!
gold price
ஏழு இலட்சம் வரை தங்கம் அதிகரிக்க வாய்ப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்!
weather
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளஎச்சரிக்கை!