வவுனியாவில் பெண் கொலை: குழந்தையுடன் கணவர் சரண்!

வவுனியா, பூம்புகார் பகுதியில் மனைவியை கழுத்து வெட்டிக்கொலை செய்துவிட்டு 2 வயது பெண் குழந்தையுடன் மாயமான சந்தேக நபரான கணவன் ஏறாவூர் பொலிஸில் சரண் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வவுனியா, பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலத்தை நேற்று பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பெண் அவரது கணவர் மற்றும் பெண் குழந்தையுடன் வீட்டில் இருந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் தாயார் பணி நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு மாலை வீட்டுக்குச் சென்று பார்த்தபோது தனது மகள் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது உடைய ஒரு பிள்ளையின் தாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தின் கழுத்துப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டமையால் மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, பெண்ணின் கணவர், அவரது இரண்டு வயது பெண் குழந்தையுடன் தலைமறைவாகி இருந்தார்.

சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் வவுனியா பூம்புகார் பகுதியில் மனைவியை கழுத்து வெட்டிக்கொலை செய்துவிட்டு 2 வயது பெண் குழந்தையுடன் மாயமான சந்தேக நபரான கணவன் நேற்று (04.11) மாலை ஏறாவூர் பொலிஸில் சரண் அடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்