இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (12) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று பிற்பகல் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகிய போதே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
சுற்றுலா அமைச்சின் கீழ் உள்ள நான்கு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நேரடி மருத்துவக் காப்புறுதிக்காக, சட்டவிரோதமாக ஒரு தனியார் தரகர் நிறுவனம் நியமிக்கப்பட்டதன் மூலம், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு ரூபா 4,750,828.72 நட்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
