வெலிமடை பகுதியில் 12 வயது சிறுவனின் மரணம் சந்தேகத்திற்குரியது என்று கூறி, அங்குள்ள முஸ்லிம் சமூகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தச் சிறுவன் மதரஸாவில் கல்வி பயின்று வந்த நிலையில் அங்குள்ள கழிவறைக்குள் இறந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளான். இதன்போது அவன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று வெலிமடை பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய பிரதேசவாசிகள், மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரினர்.
கடந்த 03 ஆம் திகதி குறித்த சிறுவன் சடலமாக மீட்க்கப்பட்டான் . சிறுவனுக்கு என்ன ஆனது என்று எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. அது ஒரு மர்மம். இவ்வளவு சிறிய குழந்தை எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும்?” என்று ஒரு போராட்டக்காரர் ஊடகங்களிடம் பேசும்போது கூறினார்.
