ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில், சிப்ஸ் பாக்கெட்டிலிருந்து வந்த ஒரு சிறிய பொம்மையை விழுங்கியதாகக் கூறப்படும் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை (19) அன்று நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் தனது தந்தை கொடுத்த சிப்ஸ் பாக்கெட்டிற்குள் இருந்த சிறிய பொம்மை துப்பாக்கியை வைத்து விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

விளையாட்டின் போது எதிர்பாராதவிதமாக அவன் அந்த பொம்மையை விழுங்கிவிட்டான். இதையடுத்து, குழந்தை அழுவதைக் கண்ட பெற்றோர் உடனடியாக அதனை அகற்ற முயற்சித்துள்ளனர், ஆனால் அவர்களது முயற்சி தோல்வியடைந்ததாக பெற்றோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வு குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சிப்ஸ் பாக்கெட்டுகளில் இதுபோன்ற சிறிய, ஆபத்தான பொம்மைகள் வழங்கப்படுவது குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
