இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த வழக்கில், சமூக வலைதளங்களில் அவரது புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தீவிரமான உத்தரவு பிறப்பித்துள்ளது.

யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த சமூக வலைதளத்திலும் இளையராஜாவின் புகைப்படம், பெயர் இசைஞானி பட்டம், குரல் எதையும் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், தற்போது சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ள அவரது அனைத்து புகைப்படங்களையும் உடனடியாக நீக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், அனுமதி இல்லாமல் அவரது படங்களைப் பயன்படுத்தி வருவாய் ஈட்டியிருந்தால், அந்த வருமான விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் இளையராஜா தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த உத்தரவு வெளியாகியுள்ளதால், சமூக வலைதளப் பயனர்கள் மற்றும் சேனல்கள் இடையே பரவலான கவனம் மற்றும் அதிர்வு உருவாகியுள்ளது.
