ஆதாரம் இருந்தால் பகிரங்கமாக வெளியிட முடியுமா? அர்ச்சுனா எம்பிக்கு விடுகப்பட்டுள்ள பகிரங்க சவால்!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மகன் சாரங்கன் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

சாரங்கன், தனது முகப்புத்தக பக்கத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றில் இந்த சவாலை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இராமநாதன் அர்ச்சுனா, தனக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்ததாகவும் அதனை ஆதாரத்துடன் நிரூபிக்குமாறும் தெரிவித்தே அவர் இந்த பதிவை இட்டுள்ளார்.

அதன்படி, குறித்த பதிவில், “நாடாளுமன்றத்தில் “ஏதோ ஒரு சோலர் நிறுவனம் சாரங்கனுக்கு 30 மில்லியன் பணம் கொடுத்து அனுமதி பெற்றது” என்று ஒரு புதிய கட்டுக்கதையை கூறியிருக்கிறீர்கள்.

நீங்கள் என்னை பற்றி கூறிய விடயத்திற்கு ஏதாவது ஒரு ஆதாரம் இருந்தால் பகிரங்கமாக வெளியிட முடியுமா? அல்லது உறுதிப்படுத்த முடியுமா?

உங்களுக்கு திராணி இருந்தால் நாடாளுமன்ற சிறப்புரிமைக்குள் பதுங்கியிருந்து நீங்கள் கூறிய அதே கருத்தை பொதுவெளியில் பகிரங்கமாக சொல்லுங்கள்.

நான் சட்ட ரீதியாக அப்படி எந்த பணமும் பெறவில்லை என்று, அல்லது குறித்த நிறுவனத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று நிரூபித்து காட்டுகிறேன்.

உங்கள் கருத்தில் உண்மை இருந்தால் பொதுவெளியில் கருத்தையோ ஆதாரத்தையோ வெளியிட தயங்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்“ என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vehicles
2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகளால் மேலதிக வருமானம்!
india
யாழை வந்தடைந்தார் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன்!
passports
வீதியோரத்தில் இருந்து மீட்க்கப்பட்ட கடவுச்சீட்டுகள்!
jaffna university
யாழ். பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயல்களில் தலையிட்டதில்லை - ரஜீவன் எம்.பி
maldives
மாலைத்தீவில் கைதான இலங்கையர்கள்: நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்
jaffna sea
யாழ். தாளையடி கடற்பகுதிக்கு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!