தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா லண்டனுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதனடிப்படையில் அங்கு ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இருப்பினும், இதற்கு எதிராக தமிழர்கள் நூற்று கணக்கில் கூடி போராட்டம் நடத்தினார்கள்.

திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் மற்றும் சிங்கள குடியேற்றங்கள் அமைக்கப்பட்டமை போன்றவற்றிற்கு மூல காரணமாக டில்வின் சில்வா செயற்பட்டார் என புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுகூடி இந்த போராட்டதை முன்னெடுத்திருந்தனர்.
இந்தநிலையில், அந்த போராட்டத்தையும் மீறி டில்வின் சில்வா கூட்டத்திற்குள் நுழைய முற்பட்ட போது இரு தரப்பினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்போது, அவர் உள்ளே சென்றுள்ள நிலையில் அங்கிருந்த தமிழர்கள் வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த இடத்தில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
