பாடசாலை வேன்களுக்கு CCTV கட்டாயம்: வெளியான அறிவிப்பு

பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கெமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

போக்குவரத்தின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் அதனை குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைத் தமது அரசாங்கம் முன்னெடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் அலுவலக போக்குவரத்து சேவைகளுக்கான வழிகாட்டல் நெறிமுறைகளை ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்னாயக்க,

“இதற்குள்ள ஒரே தீர்வு பயணிகளைப் பலப்படுத்துவதாகும். ஒரு பெண்ணுக்கோ அல்லது ஒரு பிள்ளைக்கோ யாராவது பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்தால், அதைக் கண்டும் காணாதது போல் இருக்காமல் அதற்கு எதிராகச் செயல்படும் மனிதர்கள் தேவை. ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் சரி.

ஆனால் என்ன நடந்திருக்கிறது என்றால், எமது பேருந்துத் துறையில் உள்ள சில மோசமான நிலைமைகள் காரணமாக மக்கள் பயப்படுகிறார்கள் இன்னொருவருக்காக முன்வருவதற்கு.

அதனால் பேருந்துத் துறையைத் தொழில்முறை நிலைக்குக் கொண்டு வருவது, முச்சக்கரவண்டித் துறையைத் தொழில்முறை நிலைக்குக் கொண்டு வருவது, செம்மஞ்ஞல் நிறம் சிவப்பு (Red) பக்கத்திற்குச் செல்லாமல் பச்சை பக்கத்திற்குக் கொண்டுவர நாங்கள் எடுக்கும் முயற்சி என்று நான் நினைக்கிறேன்” என்றார்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

hatton
ஹட்டன் டிக்கோயா இரட்டைக் கொலையாளி இன்று அதிகாலை தப்பியோட்டம்!
arrest
3 வருடங்களுக்கு முன் நடந்த இரட்டைக் கொலை: தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் கைது
jaffna news
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் ஆராய்வு!
arrest
19 நாட்களேயான கைக்குழந்தையை 1 லட்சத்திற்கு விற்க முயன்ற 6 பேர் கைது!
death
கல்விச் சுற்றுலாவில் நேர்ந்த பெரும் சோகம்: மாணவியைக் காப்பாற்ற முயன்ற கணித ஆசிரியர் உயிரிழப்பு!
iran
தெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!