ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பிறந்த நாள் : எவ்வித கொண்டாட்டங்களும் இல்லை

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகர ஜனாதிபதியான அநுர குமார திசாநாயக்க இன்று தனது 57வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.

இந்தநிலையில் ஜனாதிபதியின் பிறந்த நாளை முன்னிட்டு விசேட அரசு விழாக்கள் அல்லது நிகழ்வுகள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

அதற்குப் பதிலாக, வழக்கமான தினசரி ஆட்சி பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவதற்கான திட்டமே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

அனுர குமார திசாநாயக்க 1968 நவம்பர் 24 அன்று மாத்தளை மாவட்டத்தின் தேவஹூவா கிராமத்தில் பிறந்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அநுர, தேசிய மக்கள் சக்தியை (NPP) உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதான இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்த பாரம்பரியத்தை மாற்றி, 2024 செப்டம்பர் 21 அன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அவரது வெற்றி இலங்கை அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஊழலுக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு, நெருக்கடி நிலைமையில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த புதிய கொள்கைகள் இவற்றை அறிமுகப்படுத்துவதற்கு அவர் முன்னுரிமை வழங்கியுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sagara Kariyavasam
பொலிஸ் மா அதிபருக்கு அச்சுறுத்தல்?: சாகர காரியவசமுக்கு எதிராக குற்றவியல் விசாரணைப் பணியகம் நீதிமன்றில் மனு
Hikkaduwa Footwear
மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கம் இல்லை: ஹிக்கடுவை பாதணி நிறுவனம் பகிரங்க அறிக்கை!
easter attack
உயிர்த்த ஞாயிறு வழக்கு:மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழுவுக்கு பாதுகாப்பு தீவிரம்!
srilanka weather
வானிலை மையத்தின் அவசர அறிவிப்பு: பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
basil rajapaksa
வழக்கில் முன்னிலையாகாத பசில்: அமெரிக்க நீதிமன்றம் மூலம் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை
Ananda Wijepala
சாகர காரியவசத்திற்கு அரசு கடும் எச்சரிக்கை: பொலிஸ்மா அதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்ததால் பரபரப்பு!