அவசர வானிலை எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையை பாதிக்கும் சீரற்ற வானிலை காரணமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் உயர்மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அடுத்த சில நாட்களுக்குக் கடும் மழை மற்றும் பலத்த காற்று தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடைவிட்டு மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய, மத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 200 மில்லி மீற்றருக்கு மேல் (மிகக் கனமழை) மழைவீழ்ச்சி பதிவாகும்.

சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்கள், பதுளை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 150 மில்லி மீற்றருக்கு மேல் (கனமழை) மழைவீழச்சி பதிவாகும்.

ஏனைய பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கு மேல் மழைவீழ்ச்சி காணப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் மிகவும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் சேதங்களைக் குறைத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

திடீர் வெள்ளப்பெருக்கு, கூரைகள் சேதமடைதல் மற்றும் தற்காலிக தங்குமிடங்கள் அழிதல், மரங்கள் வேருடன் சாய்வது மற்றும் கிளைகள் உடைதல், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளுக்குச் சேதம், பயிர் இழப்புகள் (நெல், வாழை, பப்பாளி மற்றும் பழத்தோட்டங்கள்), துறைமுகங்களில் உள்ள படகுகளுக்குச் சேதம் மற்றும் கரையோரப் பகுதிகளில் நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் மலைப்பாங்கான மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் உள்ளோர், ஆற்றுப் படுகைகள் மற்றும் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிப்போர் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வாகன ஓட்டிகளும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்களும் விழிப்புடனும், மிகுந்த கவனத்துடனும் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!