முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அனுப்பியபோது, அவரைப் பரிசோதித்து மருத்துவச் சான்றிதழ்களை வழங்கிய 5 மருத்துவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் குறிப்புகள் அளித்த ஆவணங்களையும் விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் பெறப்பட்ட உத்தரவின் அடிப்படையில் மருத்துவர்களிடமிருந்து தொடர்புடைய வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்க கடுமையான உடல்நிலை பாதிப்பில் இருப்பதாகவும், அவருக்கு பிணை வழங்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் பின்னர், மருத்துவமனையில் இருந்து அவசரமாக சென்றமையால் ஏற்பட்ட சர்ச்சையே தற்போது விவாதமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
