மன்னார் பேசாலை கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி பலி!

மன்னார் பேசாலை கடலில் நேற்றைய தினம் வியாழன் (15) மாலை நீராடச் சென்ற 4 பேரில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளடங்களாக மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.

தைப் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து குறித்த நான்கு பேரும் கடலில் நீராடுவதற்காக சென்றுள்ளனர்.

நீராடச் சென்றவர்களில் இருவர் உயிரிழந்ததுடன் மற்றைய இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..

இதேவேளை ஒருவர் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் காணாமல் போயிருந்த ஒரு இளைஞனின் சடலம் நேற்று வியாழக்கிழமை (15) இரவு கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்கள் 16 முதல் 18 வயதுடைய பேசாலை,வசந்தபுரம்,உதயபுரம் கிராமங்களை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

hatton
ஹட்டன் டிக்கோயா இரட்டைக் கொலையாளி இன்று அதிகாலை தப்பியோட்டம்!
arrest
3 வருடங்களுக்கு முன் நடந்த இரட்டைக் கொலை: தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் கைது
jaffna news
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் ஆராய்வு!
arrest
19 நாட்களேயான கைக்குழந்தையை 1 லட்சத்திற்கு விற்க முயன்ற 6 பேர் கைது!
death
கல்விச் சுற்றுலாவில் நேர்ந்த பெரும் சோகம்: மாணவியைக் காப்பாற்ற முயன்ற கணித ஆசிரியர் உயிரிழப்பு!
iran
தெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!