வெளிநாட்டில் பதுங்கியுள்ள பாதாள உலக உறுப்பினர்களின் இரகசியக் குரல் பதிவு கசிந்தது!

வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் நான்கு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள், தமது எதிர்காலத் திட்டங்கள், குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விடயங்கள் குறித்து மேற்கொண்ட கூட்டுத் தொலைபேசி உரையாடல் அடங்கிய குரல் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இது குறித்து பொலிஸார் தீவிர அவதானம் செலுத்தியுள்ளனர்.

சுமார் 22 நிமிடங்கள் நீடிக்கும் இந்த உரையாடலில், ரசல் ஸ்மித், பிரெஞ்சு ரூபன், இங்கிலாந்தின் குடு லால் மற்றும் வெல்லே சாரங்க ஆகிய நான்கு குற்றவாளிகளே கருத்துக்களைப் பரிமாறிக்கொள்கின்றனர்.

டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட ‘வெல்லே சாரங்க’ என்பவரை அந்த நாட்டு பொலிஸார் நடத்திய விதம் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வரும் அந்நாட்டுப் பிரஜைகளைத் தாக்குவதற்கு, இலங்கையிலுள்ள தனது சகாக்களைத் தூண்டுவது தொடர்பாக ரசல் ஸ்மித் இந்த உரையாடலில் வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்