அரகலய போராட்டத்தின் போது கொல்லப்பட்ட முன்னாள் எம்பி! 12 பேருக்கு மரண தண்டனை!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்புக் அதிகாரி மீது நடத்தப்பட்ட போராட்டத்தின் போது அவர்களைத் தாக்கி கொலை செய்த வழக்கில் 12 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மூவரடங்கிய கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (11) இத்தீர்ப்பை வழங்கினார்.

மேலும் நான்கு பேருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனை விதித்த கம்பஹா மேல் நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைத்தது.

ஏனைய 23 சந்தேகநபர்கள் நிரபராதிகள் என அறிவிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அரகலய போராட்ட வேளையில் 2022 மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற கலகத்தின் போது, நிட்டம்புவ நகரில் வைத்து பொலன்னறுவை மாவட்ட எம்.பியும் அவரது பாதுகாப்பு அதிகாரியும், தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Kehelpaththara Pathme
'கெஹெல்பத்தர பத்மே' விவகாரம்: கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபரிடம் விசாரணை!
subramani dog
உகந்தை நோக்கிப் பயணிக்கும் 'சுப்பிரமணி': யோகட், பால் கொடுப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!
udaya gammanpila
"பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்" - உதய கம்மன்பில
anura go home
"அநுரவை வீட்டிற்குச் செல்லுமாறு கோரி நாடளாவிய ரீதியில் தீப்பந்தப் போராட்டங்கள் ஆரம்பம்!"
Keppapulavu Protest
கேப்பாப்புலவு போராட்டம்: பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினர் ஆதரவு
bus fare
வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் 12 சதவீதத்தால் உயர்வு!