பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!

பிரித்தானிய மன்னர் சார்லஸின் சகோதரரான அண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் (65), பொது அலுவலகத்தில் தவறான நடத்தை புரிந்ததாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (19) தனது 66 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும்; அண்ட்ரூ, பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்ட்ரூவின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, அவருக்குச் சொந்தமான பெர்க்சயர் மற்றும் நோர்போக் ஆகிய இடங்களிலுள்ள இல்லங்களில் காவல்துறையினர் தீவிர சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று காலை நோர்போக்கில் உள்ள சான்ட்ரிங்ஹாம் மாளிகைக்கு காவல்துறை வாகனங்கள் வருகை தந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்பஸ்டீனுடன் இரகசிய ஆவணங்களைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் தேம்ஸ் வேலி காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

தனக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் ஆரம்பத்திலிருந்தே திட்டவட்டமாக மறுத்து வருகின்றார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!