கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மாயம்!

கடந்த காலங்களில் பல்வேறு அரசியல்வாதிகளுக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சில எங்கு இருக்கின்றன என்பது குறித்து கூட கண்டுபிடிக்க முடியவில்லை என பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்றை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கண்டு கருத்த தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது, சில துப்பாக்கிகள் தொடர்பான தரவுப் பதிவுகள் எதுவும் இல்லை என்று பிரதி பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக துப்பாக்கி கட்டளைச் சட்டத்தை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 2024 ஆம் ஆண்டில் துப்பாக்கி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கணக்கெடுப்பிலிருந்து நிறைய தகவல்கள் தெரியவந்ததாகவும் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

மேலும், துப்பாக்கிகள் தொடர்பாக கடுமையான சட்டங்களைக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக கூறிய பிரதி அமைச்சர், தற்போது உலகின் பிற நாடுகளில் துப்பாக்கி கட்டுப்பாடு தொடர்பாக பின்பற்றப்படும் நடைமுறைகளை ஆய்வு செய்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்