கடந்த 3 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலை வருமானம் 163 மில்லியன் ரூபாயை கடந்தது!

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு கடந்த 03 நாட்களில் மாத்திரம் அதிவேக வீதிகளின் ஊடாக 163 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மாத்திரம் அதிவேக வீதிகளில் 434,338 வாகனங்கள் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அனுராத ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதில் கடந்த 12 ஆம் திகதி மாத்திரம் 45 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் கிடைத்துள்ளது.

இதேவேளை, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு அல்லது விபத்துக்களுக்கு உள்ளானால், உடனடியாக 1969 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

covid 19
மீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு: நான்கு பேர் உயிரிழப்பு
Ragitha Rajapaksa
விஜயதாசவின் புதல்வர் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரினதும் விளக்கமறியல் நீடிப்பு!
jaffna kings
விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு: Jaffna கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது!
ramanathan archchuna
அருச்சுனா கூட்டத்தில் வெளியேற்றப்பட்டமை தவறு - ரஜீவன் எம்.பி தெரிவிப்பு!
archchcuna
கிளிநொச்சி கூட்டத்தில் நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்டது யார்?
Former IGP C.D
ராஜபக்சாக்களின் நிழலாக இருந்த முன்னாள் IGP சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!