கல்கிஸ்சையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் யுக்ரைன் நாட்டுப் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிக்கு முன்பாக கடந்த 12 ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட யுக்ரைன் நாட்டுப் பெண் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யுக்ரைன் நாட்டுப் பெண், இலங்கை பெண் ஒருவரைத் தாக்கியதுடன், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும், குறித்த யுக்ரைன் நாட்டுப் பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்று இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளால் அவர், உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கல்கிசை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

விசாரணையில், குறித்த பெண் கடந்த 12 வருடங்களாக இலங்கையில் வசித்து வருபவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கை பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

hatton
ஹட்டன் டிக்கோயா இரட்டைக் கொலையாளி இன்று அதிகாலை தப்பியோட்டம்!
arrest
3 வருடங்களுக்கு முன் நடந்த இரட்டைக் கொலை: தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் கைது
jaffna news
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் ஆராய்வு!
arrest
19 நாட்களேயான கைக்குழந்தையை 1 லட்சத்திற்கு விற்க முயன்ற 6 பேர் கைது!
death
கல்விச் சுற்றுலாவில் நேர்ந்த பெரும் சோகம்: மாணவியைக் காப்பாற்ற முயன்ற கணித ஆசிரியர் உயிரிழப்பு!
iran
தெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!