பாகிஸ்தான் தலைநகரில் மீண்டும் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளையும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வர பாகிஸ்தான் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

தற்போது அமுலில் உள்ள தற்காலிக போர் நிறுத்தம் முடிவடைவதற்கு முன்னதாக, இஸ்லாமாபாத்தில் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்த பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக முன்மொழிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தச் சந்திப்பை அவசரமாக நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது.

ஏற்கனவே நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளைக் களைய இந்த சந்திப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

covid 19
மீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு: நான்கு பேர் உயிரிழப்பு
Ragitha Rajapaksa
விஜயதாசவின் புதல்வர் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரினதும் விளக்கமறியல் நீடிப்பு!
jaffna kings
விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு: Jaffna கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது!
ramanathan archchuna
அருச்சுனா கூட்டத்தில் வெளியேற்றப்பட்டமை தவறு - ரஜீவன் எம்.பி தெரிவிப்பு!
archchcuna
கிளிநொச்சி கூட்டத்தில் நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்டது யார்?
Former IGP C.D
ராஜபக்சாக்களின் நிழலாக இருந்த முன்னாள் IGP சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!