திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்: திறைசேரி செயலாளர் நிதிக்குழுவில் இன்று முன்னிலை

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவு மூன்றாம் தரப்பொன்றின் கைக்குச் சென்றமை தொடர்பான விசாரணைகளுக்காக, திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளரான கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும இன்று (30) மதியம் 1.00 மணிக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் (COPF) முன்னிலையாகவுள்ளார்.

திறைசேரியினால் மேற்கொள்ளப்படவிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவொன்று, உரிய தரப்புக்குச் செல்லாமல் சந்தேகத்திற்கிடமான முறையில் வேறொரு மூன்றாம் தரப்பொன்றின் கைக்குச் சென்றுள்ளது. இதுவொரு பாரிய சைபர் தாக்குதலாக இருக்கலாம் எனப் பலத்த சந்தேகம் எழுந்துள்ள நிலையிலேயே, இது குறித்த விசாரணைகளுக்காக நிதி அமைச்சின் செயலாளர் அழைக்கப்பட்டுள்ளார்.

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் விடுத்த இந்த அழைப்பை ஏற்று, இன்று (ஏப்ரல் 30) குழுவின் முன் சமூகமளிக்க முடியாது எனத் திறைசேரி செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும இதற்கு முன்னர் கடிதம் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். எவ்வாறாயினும், இந்த விவகாரத்தின் தீவிரம் காரணமாக அவர் இன்று மதியம் 1.00 மணிக்குக் குழுவின் முன் ஆஜராகவுள்ளார்.

நாட்டின் நிதி மேலாண்மையிலும், சைபர் பாதுகாப்பிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பில் இன்றைய அமர்வில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நிதி எவ்வாறு திசைதிருப்பப்பட்டது, பாதுகாப்பு குறைபாடுகள் எங்கு நிகழ்ந்தன என்பது குறித்த பல முக்கிய தகவல்கள் இதன் மூலம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran
ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை துப்பாக்கிச் சூடு!
Suresh Saleh
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுரேஷ் சலே நீதிமன்றில் ஆஜர்!
iran
தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும்: அமெரிக்காவிற்கு ஈரான் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை
suriya movie shoot
கொழும்பில் படமாக்கப்படவிருந்த இந்தியத் திரைப்படத்தில் சூர்யாவுடன் நடிக்கவிருந்த இலங்கை கலைஞர் திடீரென உயிரிழப்பு!
MT Tifani
இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் ஈரான் ஆதரவு கப்பல் இடைமறிப்பு: அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை!
vavuniya
வவுனியாவில் இளைஞர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட குழு: பொலிசார் தீவிர விசாரணை!