மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக இலங்கையில் எரிபொருள் விலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அரசாங்கம் ஏற்கனவே மக்களுக்கு முடிந்த அளவுக்கு நிவாரணம் வழங்கியிருந்தாலும், ஒரு “சிறிய அதிகரிப்பு” அவசியமாகலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த விலை திருத்தம் எப்போது அமுல்படுத்தப்படும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
ஏப்ரல் 30-ஆம் திகதி எதிர்பார்க்கப்பட்ட மாத இறுதி எரிபொருள் விலை திருத்தம் நடைமுறைக்கு வராததை அடுத்து, இந்த கருத்துகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
