அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் பதற்ற நிலை மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை அணுகவோ அல்லது அதற்குள் நுழையவோ அமெரிக்கப் படைகள் முயற்சித்தால், அவற்றை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் இராணுவம் கடுமையாக எச்சரித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியே கொண்டு செல்லும் நோக்கில், “புராஜெக்ட் ஃப்ரீடம்” எனப்படும் கடற்படை நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தரப்பின் தகவலின்படி, குறித்த கடற்படை நடவடிக்கைகள் அடுத்த சில மணிநேரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, போர்நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான 14 அம்சங்களைக் கொண்ட தனது சமீபத்திய முன்மொழிவுக்கு வோஷிங்டனிலிருந்து கிடைத்த பதிலை ஆய்வு செய்து வருவதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தெஹ்ரான் முன்வைத்த இந்த முன்மொழிவை “ஏற்றுக்கொள்ள முடியாதது” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்