நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உண்டியல் உடைப்பு: 21 இலட்சம் ரூபாயுடன் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் கைது!

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய உண்டியலை உடைத்து சுமார் 21 இலட்ச ரூபாய் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாக பூசணி அம்மன் ஆலய உண்டியல் நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாலை உடைக்கப்பட்டு உண்டியல் காசு திருடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் காலை ஊர்காவற்துறை பொலிஸாருக்கு ஆலய நிர்வாகத்தால் முறைப்பாடு வழங்கப்பட்டதை அடுத்து துரித கெதியில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் , இருவரை குறிகட்டுவான் பகுதியிலும் , மற்றுமொருவரை நயினாதீவு பகுதியிலும் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்து உண்டியல் காசு 21 இலட்ச ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாகவும் கைதான மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் , அவர்கள் 16 , 17மற்றும் 27 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

MagazinePrison
மகசீன் சிறைச்சாலை N பிரிவில் ஞானசார தேரர்; நாமல் ராஜபக்சவுடன் ஒரே இடத்தில் தடுத்து வைப்பு!
protes
Thileepan Statue Protest: திலீபன் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து லண்டனில் போராட்டம்
ProtestArrest
வரி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவுக்கு எதிரான பேரணி: புறக்கோட்டையில் 6 பேர் கைதாகினர்!
PoliceOfficerArrested
வாகன விபத்து வழக்கில் லஞ்சம்: பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து கைதான பொலிஸ் கான்ஸ்டபிள்
ChennaiHighCourt
சுற்றுலா விசாவில் வந்து திருமணம்: நாடுகடத்தப்பட இருந்த இலங்கை பெண்ணுக்கு கிடைத்த தீர்ப்பு!
IranOilTanks
ஈரான் கப்பல்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை!