கடல் கடந்தும் ஓயாத முள்ளிவாய்க்கால் குரல்: சர்வதேச நாடுகளில் உணர்வெழுச்சியுடன் நடந்த நினைவேந்தல் நிகழ்வுகள்

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும், முதுபெரும் தளபதியுமான திரு. பொட்டு அம்மான் அவர்கள் உட்பட ஒரு தொகுதி மாவீரர்களுக்கு, புலம்பெயர் நாடுகளில் கடந்த சனிக்கிழமை (02.05.2026) அன்று உணர்வுபூர்வமான வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.

சுவிற்சர்லாந்து, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளிலும் தமிழீழ மாவீரர் பணிமனையினரால் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் தேசத்தின் விடுதலைக்காகத் தங்களை அர்ப்பணித்த இந்த வீரமறவர்களை நினைவுகூரும் வகையில், ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

புலம்பெயர் தேசமெங்கும் ஒலித்த இந்த வீரவணக்க நிகழ்வுகள், அடுத்த தலைமுறைக்கும் விடுதலைப் போராட்டத்தின் தியாகங்களைக் கொண்டு சேர்க்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

MagazinePrison
மகசீன் சிறைச்சாலை N பிரிவில் ஞானசார தேரர்; நாமல் ராஜபக்சவுடன் ஒரே இடத்தில் தடுத்து வைப்பு!
protes
Thileepan Statue Protest: திலீபன் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து லண்டனில் போராட்டம்
ProtestArrest
வரி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவுக்கு எதிரான பேரணி: புறக்கோட்டையில் 6 பேர் கைதாகினர்!
PoliceOfficerArrested
வாகன விபத்து வழக்கில் லஞ்சம்: பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து கைதான பொலிஸ் கான்ஸ்டபிள்
ChennaiHighCourt
சுற்றுலா விசாவில் வந்து திருமணம்: நாடுகடத்தப்பட இருந்த இலங்கை பெண்ணுக்கு கிடைத்த தீர்ப்பு!
IranOilTanks
ஈரான் கப்பல்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை!