விஜய் உயிருக்கு ஆபத்து? பொலிஸ் நிலையத்தில் காங்கிரஸ் முறைப்பாடு!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் உயிருக்கு ஆபத்து என பொலிஸ் நிலையத்தில் காங்கிரஸ் முறைப்பாடு அளித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை முதன்முறையாக சந்தித்த விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

இந்நிலையில், விஜய்யை ஆட்சியமைக்க அனுமதிக்கும்படி ஆளுநருக்கு பல கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில்,பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் என தமிழக ஆளுநர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இந்நிலையில், விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுப்பதாகவும், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் டிஜிபி-யிடம் சென்னை மேற்கு காங்கிரஸ் தலைவரும் கவுன்சிலருமான டில்லிபாபு முறைப்பாடு அளித்துள்ளார்.

விஜய்க்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தும் நிலையில், அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, அவருக்கும் விஜய்யுடன் கைகோர்த்திருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

MagazinePrison
மகசீன் சிறைச்சாலை N பிரிவில் ஞானசார தேரர்; நாமல் ராஜபக்சவுடன் ஒரே இடத்தில் தடுத்து வைப்பு!
protes
Thileepan Statue Protest: திலீபன் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து லண்டனில் போராட்டம்
ProtestArrest
வரி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவுக்கு எதிரான பேரணி: புறக்கோட்டையில் 6 பேர் கைதாகினர்!
PoliceOfficerArrested
வாகன விபத்து வழக்கில் லஞ்சம்: பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து கைதான பொலிஸ் கான்ஸ்டபிள்
ChennaiHighCourt
சுற்றுலா விசாவில் வந்து திருமணம்: நாடுகடத்தப்பட இருந்த இலங்கை பெண்ணுக்கு கிடைத்த தீர்ப்பு!
IranOilTanks
ஈரான் கப்பல்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை!