அரசாங்கத்திற்கான வாகனங்கள் கொள்வனவு செய்வது தற்காலிகமாக நிறுத்தம்: ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

அரசாங்கத்திற்கான வாகனங்கள் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கச் செலவினங்களைக் கட்டுப்படுத்த இத்தகைய முடிவு எடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, மே மாதத்தில் மட்டும் எரிபொருள் இறக்குமதிக்காக அரசாங்கம் 550 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட வேண்டியிருந்தது.

அதன் விளைவாக, எரிபொருள் நுகர்வு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும். எரிபொருளுக்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக தேவையற்ற செலவினங்களைக் குறைப்பது அவசியம்.

அதன்படி, வரும் காலத்தில் அரசாங்கத்திற்கான வாகனங்கள் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்