3 வருடங்களுக்கு முன் நடந்த இரட்டைக் கொலை: தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் கைது

இரண்டு வேறுபட்ட கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மூன்று வருடங்களுக்கும் மேலாகத் தேடப்பட்டு வந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (24) மதுகம – வெலிகந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஞாயிற்றுக்கிழமை (25) லிந்துலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

அதன்பின்னர் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, அவர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான மகேஷ் அசலங்க டி சொய்சா என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி, தலவாக்கலை – கிரேட் வெஸ்டன் மலையின் உச்சியில் பெண்ணொருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும், தலங்கம பொலிஸ் பிரிவில் 57 வயதான பெண்ணொருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலுமே இவர் தேடப்பட்டு வந்த முதன்மைச் சந்தேகநபராவார்.

மத்திய மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ், சந்தேகநபரின் தொலைபேசி இலக்கத்தின் மூலம் பெறப்பட்ட தரவுகள் மற்றும் இரகசியத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்தத் திட்டமிட்ட கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, லிந்துலை பொலிஸாரினால் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்த சந்தேகநபர், இன்று (26) நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் பின்னரே அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

குறித்த இரு கொலைச் சம்பவங்கள் தொடர்பிலும் லிந்துலை பொலிஸாரும் தலங்கம பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்