வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் ஆராய்வு!

யாழ்ப்பாணம் – வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர குறித்த பிரதேசங்களை பார்வையிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பலாலி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள இராணுவ ஆதார வைத்தியசாலை வளாகத்தில் இதற்கான கூட்டம் ஒன்று இன்று (26) காலை இடம்பெற்றது.

அத்துடன் இராணுவ முகாம்கள் அமைந்துள்ள மக்களின் காணிகளுக்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பாகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் ஆராய்ந்தானர்

மேலும் இராணுவத்தின் படைத் தளங்கள் அமைந்துள்ள பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தின் ஒவ்வொரு இடங்களையும் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த விஜயத்தின் போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன், பலாலி இராணுவ கட்டளை தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்