சுவிஸில் இருந்து வந்த முதியவர் யாழில் படுகொலை – இருவர் கைது!

சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பகுதிக்கு வருகை தந்த முதியவர் ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டதுடன் நகை மற்றும் பணம் என்பன களவாடப்பட்டிருந்தன.

குறித்த கொலையை மேற்கொண்ட சந்தேகநபர்கள் தலைமறைவாகி இருந்த நிலையில் இன்று அதிகாலை யாழ்ப்பாண பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரால் இந்த கைது நடவடிக்கை இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் தெல்லிப்பழை மற்றும் சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதன்போது அவர்களிடமிருந்து சில சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!