தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் இன்று (09) காலை தொழில் புரிந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி நகரைச்சேர்ந்த சிவகுருநாதன் சாரங்கன் 23 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார் .

உயிரிழந்த இளைஞனின் சடலம் தருமபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்டபொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவமானது முறையற்ற மின் இணைப்பு காரணமாகவே குறித்த உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
