கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே மோதல்; இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் மோதல் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் இன்று (10.07.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது சிறையில் உள்ள ஐந்து கைதிகளுக்கு இடையே மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் காயமடைந்த இரண்டு கைதிகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இந்த மோதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்