கிளிநொச்சி கூட்டத்தில் நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்டது யார்?

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவும் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், சிலரின் பொறுப்பற்ற மற்றும் நாகரிகமற்ற நடத்தையால் இடைநிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது வருத்தமளிக்கிறது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மக்களின் வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு, விவசாயம், மீன்பிடி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய அபிவிருத்தி விடயங்கள் விவாதிக்கப்படும் உயர்மட்ட நிர்வாக மேடைகள், தனிப்பட்ட அரசியல் நாடகங்களுக்கான அரங்குகளாக மாற்றப்படக் கூடாது.

கூட்டங்களில் கலந்துகொள்வது என்பது வெறுமனே சத்தமிடுவதோ, குழப்பம் விளைவிப்பதோ அல்ல, ஜனநாயக மரபுகளையும், நிர்வாக நடைமுறைகளையும், அதிகாரிகளின் கௌரவத்தையும் மதித்து செயல்பட வேண்டிய பொறுப்புணர்வாகும்.

அதற்கான அரசியல் நாகரிகத்தையும், நிர்வாக பண்பாட்டையும் சிலர் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

தொடர்ச்சியாக அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அபிவிருத்திப் பணிகளை திசைதிருப்பும் முயற்சிகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

அரசியல் இலாபத்திற்காக மக்களின் எதிர்காலத்தோடு விளையாட அனுமதிக்க முடியாது.இன்று நடைபெற்ற சம்பவம், இத்தகைய பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை அவசியம் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

சிலர் குழப்பத்தை உருவாக்கலாம், ஆனால் நாம் அபிவிருத்தியை உருவாக்குவோம். சிலர் அரசியல் நாடகத்தை அரங்கேற்றலாம், ஆனால் நாம் மக்களின் வாழ்க்கையை மாற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம்.

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி, முன்னேற்றம் மற்றும் இருப்பு தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் நாங்களும் கூடுதல் கவனம் செலுத்துவோம். கிளிநொச்சியை ஒருபோதும் கைவிடமாட்டோம்.

மீண்டும் விரைவில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் உறுதியான தீர்மானங்களும், முன்னேற்றப் பாதையும் அங்கே உருவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தி – பு.கஜிந்தன்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vavuniya
முதுமையைக் காட்டி தப்ப முடியாது! 12 வயது பேத்தியை தவறான முறைக்கு உட்படுத்திய 81 வயது முதியவருக்கு 15 ஆண்டுகள் சிறை
Sugeeswara Bandara
நரம்பு வெடித்துக் தீவிரமடைந்த பாதிப்பு: சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கை!
PineappleExport
இலங்கை ஏற்றுமதித்துறையில் புதிய சாதனை: பாகிஸ்தானுக்கு முதன்முறையாகச் செல்லும் அன்னாசிப்பழங்கள்
ChineseNationals
கொழும்பு துறைமுக நகர் கொலை சம்பவம்: சட்டவிரோதமாக தங்கியுள்ள 3 சீனர்களைக் கைது செய்ய பொதுமக்கள் உதவி தேவை
GoldStatue
2500 கோடி ரூபாய் அனுமான் சிலை வதந்தியா? அதிரடிப்படை நடத்திய சோதனையின் பின்னணி!
jaffna eye issue
பண்டத்தரிப்பு முருகன் ஆலய கண் பாதிப்புச் சம்பவம்: மின்குமிழ் உரிமையாளர் விளக்கமறியலில்!