பாடசாலையில் ஆசிரியை கார் எரிந்த சம்பவம்: 8 வயது சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க பழைய மாணவர் சங்கம் மறுப்பு

ஆசிரியரின் வாகனம் தீப்பிடித்து எரியக் காரணமான தீக்குச்சிகளைப் பற்ற வைத்த எட்டு வயது சிறுவனின் வயதை கருத்திற் கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என சர் ஜொன் கொத்தலாவல கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, சிறுவன் மீது எந்தவிதக் குற்றச்சாட்டுகளோ அல்லது அழுத்தமோ கொடுக்கப்படாது என வலியுறுத்தியுள்ளதுடன், பாடசாலை அதிகாரிகள் முறையற்ற செல்வாக்கைப் பிரயோகித்ததாக சமூக ஊடகங்களில் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளது.

ஜூலை 3 ஆம் திகதி பிற்பகல் 2.55 மணியளவில், பாடசாலை வளாகத்திற்குள் ஆசிரியர் ஒருவரின் வாகனம் தீப்பிடித்து எறிந்துள்ளது. அதன் பின்னர், சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, எட்டு வயது சிறுவன் ஒருவன், வாகனத்தின் அருகே சுற்றித் திரிந்து ஒரு தீப்பெட்டியை வீசியெறிவது தெரியவந்துள்ளது.

காப்பீட்டு நோக்கங்களுக்காக, ஆசிரியர் குருநாகலை தலைமையக பொலிஸாரிடம் சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்படங்களைச் சமர்ப்பித்து முறைப்பாடு கொடுத்த நிலையில், ஆனால் அதில் சிறுவனின் பெயர் குறிப்பிடவில்லை.

ஆசிரியர், குழந்தையையோ அல்லது பெற்றோரையோ எந்த வகையிலும் வற்புறுத்தவில்லை. அவர் தனது முறைப்பாடுகளில் குழந்தையின் பெயரைக் கூட விரும்பவில்லை.

இருப்பினும், ஆசிரியருக்கு எதிரான முறைப்பாடுகளில் குழந்தையின் பெயரையும் தாய் சேர்த்திருப்பது வருந்தத்தக்கது.

ஜூலை 4 ஆம் திகதி, குழந்தை தனது பெற்றோருடன் தலைமை ஆசிரியர் மற்றும் பிரதித் தலைமை ஆசிரியர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது,

இதன்போது, சிறுவன் ​​பல தீக்குச்சிகளைப் பற்றவைத்து, அதில் ஒன்றை காரின் பம்பரில் வீசியதை அவன் ஒப்புக்கொண்டான். பெற்றோர் இந்தச் செயலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் சிறுவனின் தந்தை சேதத்திற்கு இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்தார். குற்றப் புலனாய்வு அலுவலகத்தைச் (SOCO) சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, காரைப் பழுதுபார்ப்பதற்காக எடுத்துச் செல்ல அனுமதியளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த சிறுவன் பாடசாலைக்கு தவறாமல் வருகை தருவதாகவும், அவரின் பாதுகாப்பும் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு வருவதாக பழைய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna
யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் வெற்றுக்காணிகளை சுருட்டும் கும்பல்: பொலிஸார் விசாரணை!
india
மிக்ஸர் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கிய வேர்க்கடலை: 3 வயது சிறுவன் உயிரிழப்பு!
anuradhapura
அனுராதபுரத்தில் கோர விபத்து: இருவர் பலி; கர்ப்பிணிப் பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
nalinda jayatissa
சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்: 200 பேரிடம் விசாரணை - பின்னணியில் உள்ளவர்களை வேட்டையாட 8 குழுக்கள் அமைப்பு!
police sri lanka
'அபராதம் செலுத்துமாறு' வரும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸார்
sri lankan food
சர்வதேச உணவு சுற்றுலாத் தரவரிசை 2026: டாப் 50 பட்டியலில் இடம்பிடித்தது இலங்கை!