கொழும்பில் இருந்து வவுனியா சென்ற சொகுசு பேருந்து விபத்து: சாரதி படுகாயம்!

யாழ்ப்பாணம் – கண்டி (A9) பிரதான வீதியில், மரடன்கடவலையின் மிதிவத்த பகுதியில் சொகுசு பயணிகள் பேருந்து ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இன்று காலை (21) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச்சென்று கொண்டிருந்த சொகுசு பயணிகள் பேருந்து, முன்னால் வீதியில் வலதுபுறம் திரும்பிக்கொண்டிருந்த லொறியொன்றின் பின்பகுதியில் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த பேருந்தின் சாரதி சிகிச்சைக்காக கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vavuniya
முதுமையைக் காட்டி தப்ப முடியாது! 12 வயது பேத்தியை தவறான முறைக்கு உட்படுத்திய 81 வயது முதியவருக்கு 15 ஆண்டுகள் சிறை
Sugeeswara Bandara
நரம்பு வெடித்துக் தீவிரமடைந்த பாதிப்பு: சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கை!
PineappleExport
இலங்கை ஏற்றுமதித்துறையில் புதிய சாதனை: பாகிஸ்தானுக்கு முதன்முறையாகச் செல்லும் அன்னாசிப்பழங்கள்
ChineseNationals
கொழும்பு துறைமுக நகர் கொலை சம்பவம்: சட்டவிரோதமாக தங்கியுள்ள 3 சீனர்களைக் கைது செய்ய பொதுமக்கள் உதவி தேவை
GoldStatue
2500 கோடி ரூபாய் அனுமான் சிலை வதந்தியா? அதிரடிப்படை நடத்திய சோதனையின் பின்னணி!
jaffna eye issue
பண்டத்தரிப்பு முருகன் ஆலய கண் பாதிப்புச் சம்பவம்: மின்குமிழ் உரிமையாளர் விளக்கமறியலில்!