சுவிஸ் வாழ் இலங்கையர்களுக்கு நற்செய்தி: பேர்ணில் தூதரக நடமாடும் சேவை ஆரம்பம்

சுவிட்சர்லாந்தின் பேர்ண் (Bern) நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் இலங்கை மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய தூதரகச் சேவைகளை வழங்கும் பொருட்டு, ஜெனீவாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் ஜெனரல் அலுவலகத்தால் இரண்டு நாட்கள் கொண்ட நடமாடும் சேவையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் சேவை எதிர்வரும் 29 (சனிக்கிழமை) மற்றும் ஆகஸ்ட் 30 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய திகதிகளில் ‘Haus Der Religionen, Europaplatz 1, 3008 Bern’ என்ற முகவரியில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த சேவையின் ஊடாகக் கடவுச்சீட்டு (Passport) விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் கடவுச்சீட்டில் பெயர் திருத்தங்களை மேற்கொள்ளுதல், பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுகள், இரட்டைக் குடியுரிமைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் e-BMD தொகுதியின் ஊடாகப் பெறப்படும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை விநியோகித்தல், சிவில் நிலை உறுதிமொழிப் பத்திரங்களைச் சான்றளித்தல், ஓய்வூதியதாரர்களின் ஆயுள் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ளுதல், உறுதிமொழிப் பத்திரங்கள் மற்றும் அதிகாரப் பத்திரங்களைச் சான்றளித்தல் ஆகிய சேவைகளும் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளன.

கால அவகாசம் குறைவாக உள்ளமையினால் , இந்தச் சேவைகளைப் பெற விரும்புபவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு முன்னர் www.lankamission.org/mcs என்ற இணையதள முகவரிக்கு பிரவேசித்து முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவையான ஆவணங்கள் மற்றும் விபரங்களை www.lankamission.org/checklist என்ற முகவரியில் அறிந்துகொள்ள முடியும் என்பதுடன், மேலதிக விசாரணைகளுக்கு slcgs.geneva@lankamission.org என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது +41 77 990 6073, +41 77 909 8969 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாகவும் தொடர்பு கொள்ள முடியும் என ஜெனீவாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் ஜெனரல் அலுவலகம் அறிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!