அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: 72,000 புதிய நியமனங்கள் வழங்க நடவடிக்கை!

அரச ஊழியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதியமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, அரச சேவைக்கு 72,000 புதிய ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் முறையான தகுதிகளின் அடிப்படையில் நியமனங்களும் பதவி உயர்வுகளும் வழங்கப்படாததால், அரச சேவையின் தரம் வெகுவாக வீழ்ச்சியடைந்திருந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

நாட்டின் முக்கிய நிர்வாகக் கட்டமைப்பாகத் திகழும் சிவில் சேவையை வலுப்படுத்துவது அரசாங்கத்தின் முதன்மைப் பொறுப்பாகும் என்றார்.

அத்துடன், அரச சேவையில் சுமார் 72,000 புதிய ஊழியர்களைப் புதிதாகச் சேர்த்துக் கொள்வதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

எதிர்காலத்தில் அரச ஊழியர்களின் இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கான பாடசாலை சேர்க்கைகள் என்பன அரசியல் தலையீடுகள் இன்றி, சரியான வழிமுறைகள் ஊடாகவே மேற்கொள்ளப்படும் என பிரதியமைச்சர் நளின் ஹேவகே உறுதியளித்துள்ளார்.

அரச ஊழியர்கள் அவர்களின் திறமைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும் என்றும், அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு நேர்மையுடன் பங்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய அவர், முறைகேடுகள் நடக்கும் பட்சத்தில் மட்டுமே அரசாங்கம் தலையிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!