பாதாள உலகக்குழுவின் முக்கிய புள்ளியாக கருதப்படும் ‘கெஹல்பத்தர பத்மே’ பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே, சர்வதேச நடவடிக்கையை தொடர்ந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பின்னர் விசாரணைகளுக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவரை எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன்போது, சந்தேகநபரின் எதிர்தரப்பினர் வெலிசர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை வேறு சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு சந்தேகநபர் சார்பில் முன்னியான சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், சந்தேகநபரை மிகவும் பாதுகாப்பான பொருத்தமான சிறைச்சாலையில் தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இதற்கமைய, சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் ‘கெஹல்பத்தர பத்மே’ பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
