சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!

கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின்தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு, வீட்டில் இருந்து உணவைப் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள, சிறைக் கூடத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் செனக பல்லதென்ன தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு நாளில் மூன்று பேர் வரையில் நாமல் ராஜபக்சவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கடந்த 4ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாளைய தினம்(08.09.2026) இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் நாமல் ராஜபக்ச கலந்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!