13 நாடுகளில் தலைமறைவாக உள்ள 112 குற்றவாளிகள்: 2027க்குள் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை என பொலிஸ் அறிவிப்பு

சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 112 குற்றவாளிகள் 13 நாடுகளில் தலைமறைவாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளரும் உதவி காவல்துறை அத்தியாட்சகருமான எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயல்பாட்டின் முன்னேற்றம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இன்று (29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,

மேற்படி அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகநபர்களை 2027 ஆம் ஆண்டிற்குள் நாட்டிற்கு அழைத்து வர முடியும். அதன் பின்னர் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சந்தேகத்தின் பேரில் அடையாளம் காணப்பட்டுள்ள அனைவரும் போதைப்பொருள் கடத்தல் மூலமே சட்டவிரோதமாகப் பணத்தைச் சம்பாதித்துள்ளனர்.

அவ்வாறு சட்ட விரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் காவல்துறையின் இரண்டு விசேட பிரிவுகள் ஊடாக 24 மணி நேரமும் தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

NamalStatement
மக்கள் துயர்தீர 500 நாட்கள் கூட சிறையில் இருக்கத் தயார்: 50ஆவது நாளில் நாமல் ராஜபக்ஷ விசேட அறிக்கை!
BritishAirways
10 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கான சேவையை மீண்டும் தொடங்கியது பிரிட்டிஷ் ஏர்வேஸ்!
SriLankaWeather
வங்காள விரிகுடாவில் உருவாகிறது புதிய சூறாவளி: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
SritharanMP
செம்மணி புதைகுழி அகழ்வு மற்றும் காணி விடுவிப்பு: கனடா வெளிவிவகாரத் திணைக்களத்திடம் சான்றுகளுடன் சிறீதரன் எம்.பி. கோரிக்கை
ChemmaniMassGrave
செம்மணி புதைகுழி அறிக்கை: 'பெரும் மனிதப் புதைகுழி' சொற்றொடர் நீக்கம் - நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!
ViharamahadeviPark
நீதிமன்ற உத்தரவையும் மீறித் தொடரும் சத்தியாகிரகம்: கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் பிக்குகள் ஆஜர்!