தாயாரின் கண்முன்னே பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த 6 வயது சிறுமி!

மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் பேருந்திலிருந்து கீழே விழுந்து பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று தனது தாயார் மற்றும் இளைய சகோதரனுடன் பேருந்து நிலையத்திற்கு வந்து, பாடசாலைக்கு செல்வதற்காக பேருந்தில் ஏற முயன்ற பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், கொடஉட பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட சனுதி சேனாரா என்ற 6 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திக்வெல்ல வடக்கு மகா வித்தியாலயத்தில் முதலாம் தரத்தில் கல்வி கற்கும் அவர், காலையில் பாடசாலை செல்வதற்காக தனது தாயார் மற்றும் இளைய சகோதரனுடன் வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.

மாத்தறையில் இருந்து மித்தெனிய நோக்கிச் சென்ற தனியார் பேருந்துக்கு கை காட்டி, அவர்கள் அதன் முன்கதவு வழியாக அதில் ஏற முயன்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

முதலில் தாயாரும் சகோதரனும் பேருந்தில் ஏறியதை அடுத்து, இரண்டாவதாக சிறுமி பேருந்தில் ஏற முற்பட்டவுடன் பேருந்து முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.

இதன் போது அவர் பேருந்திலிருந்து கீழே விழுந்து அதே பேருந்தின் பின் சக்கரத்திற்குள் சிக்கியதாகவும் ஆரம்ப கட்டப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் சிறுமியின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vavuniya
முதுமையைக் காட்டி தப்ப முடியாது! 12 வயது பேத்தியை தவறான முறைக்கு உட்படுத்திய 81 வயது முதியவருக்கு 15 ஆண்டுகள் சிறை
Sugeeswara Bandara
நரம்பு வெடித்துக் தீவிரமடைந்த பாதிப்பு: சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கை!
PineappleExport
இலங்கை ஏற்றுமதித்துறையில் புதிய சாதனை: பாகிஸ்தானுக்கு முதன்முறையாகச் செல்லும் அன்னாசிப்பழங்கள்
ChineseNationals
கொழும்பு துறைமுக நகர் கொலை சம்பவம்: சட்டவிரோதமாக தங்கியுள்ள 3 சீனர்களைக் கைது செய்ய பொதுமக்கள் உதவி தேவை
GoldStatue
2500 கோடி ரூபாய் அனுமான் சிலை வதந்தியா? அதிரடிப்படை நடத்திய சோதனையின் பின்னணி!
jaffna eye issue
பண்டத்தரிப்பு முருகன் ஆலய கண் பாதிப்புச் சம்பவம்: மின்குமிழ் உரிமையாளர் விளக்கமறியலில்!