இந்தியாவின் குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியில் திருமண நிகழ்வொன்றில் திருமணத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மணமகன் மனமகளை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாவ்நகர் பகுதியை சேர்ந்த சாஜன் பரையா என்ற இளைஞனும், சோனி ரத்தோட் என்ற பெண்ணும் திருமண பந்தத்தில் இணைய காத்திருந்தனர்.
திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், திருமண முகூர்த்தத்திற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு, திருமண தம்பதிகள் இருவருக்கும் வாய்தர்க்கம் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
திருமண சேலை பிடிக்காதது தொடர்பாக வெடித்த வாக்குவாதம், திருமண செலவுகள் மற்றும் பணம் குறித்து நீடித்தது.
அதனால் ஆத்திரமடைந்த மணமகன், மணமகளை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். குறித்த சம்பவத்தில் மணமகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மணமகன் அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மணமகள் உடலத்தை கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மணமகனை காவல்துறை சிறப்பு குழு அமைத்து தேடி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
