தொடருந்து விபத்தில் இருந்து நொடிப்பொழுதில் தப்பிய வேன்!

ஜா-எல தொடருந்து கடவையில் இருந்து மினுவாங்கொட நோக்கிச் சென்ற வேன் ஒன்று, பாரிய தொடருந்து விபத்தில் இருந்து தப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 7.30 மணியளவில், ஜா எல தொடருந்து கடவையில் தண்டவாளத்தில் வேன் சிக்கிக் கொண்டது.

வேனின் சக்கரங்களில் ஒன்று தண்டவாளத்தில் சிக்கிய நிலையில் அதனை விடுவித்து கொள்ள முடியாமல் போயுள்ளது.

சிக்கிய சக்கரத்தை விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது, ​​கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்ற தொடருந்தும் அதே இடத்தை நெருங்கி வந்தது.

எனினும் வேனுக்கு அருகில் நின்ற ஒருவர் தொடருந்து பாதையில் முன்னோக்கி ஓடி தொடருந்து ஓட்டுநருக்கு சமிக்ஞை செய்தார்.

அதற்கமைய, தொடருந்தின் வேகத்தைக் குறைத்து தொடருந்தை நிறுத்த ஓட்டுநர் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெற்றன.

மேலும் சிக்கிய வேனிற்கு சுமார் ஒன்றரை அடி தூரத்தில் தொடருந்தை நிறுத்த முடிந்ததால் நொடிப்பொழுதில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

semmani
யாழ். வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளதாக தகவல்!
jaffna university
சிங்கள மயமாக்கப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழகம் - வெளியான அதிர்ச்சித் தகவல்
benjamin netanyahu
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு இணக்கம்!
anura
அமெரிக்க போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி!
bank
வங்கிகளின் புதிய நேரக் கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு: இலங்கை வங்கிகள் சங்கம்
sathosa
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!