ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு இணக்கம்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், ஈரானின் எரிவாயு வயல்கள் (Gas fields) மீதான அடுத்தக்கட்டத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தீர்மானித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வேண்டுகோளுக்கிணங்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நெதன்யாகு குறிப்பிட்டதாக பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, ட்ரம்பை ஈரானுடனான போருக்குள் தாம் இழுப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் இதன்போது நிராகரித்தார்.

மறுபுறம், ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் ஜெரூசலம் ஆகிய பகுதிகளில் பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானின் உட்கட்டமைப்புகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியம் , குவைத், சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் கடந்த சில மணித்தியாலங்களில் ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இத்தாக்குதல்களுக்கு ஈரானே காரணம் என கை்கிய அரபு இராச்சியமும், பஹ்ரைனும் குற்றம் சுமத்தியுள்ளன.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி போர் ஆரம்பித்தது முதல் ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,186 ஆக உயர்ந்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பான ‘ஹரானா’ (Hrana) தெரிவித்துள்ளது.

கத்தாரின் ‘ராஸ் லப்பான்’ எரிசக்தி முனையம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்