🔴 PHOTO ஓமந்தையில் பொலிசாரால் அபகரிக்கப்படும் காணி: விகாரை அமைக்க முயற்சி என குற்றச்சாட்டு

வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியினை பொலிசார் அபகரித்து விகாரை அமைப்பதற்கு முயற்சிப்பதாக பொது மக்களால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஏ9 வீதிதில் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை (30.06) தினம் துப்புரவு செய்த ஓமந்தை பொலிசார் குறித்த இடத்தில் விகாரை ஒன்றினை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த காணி நீண்ட காலமாக ஒருவரின் பராமரிப்பில் இருந்த போதிலும் அவருக்கான காணி ஆவணங்கள் இல்லாத நிலையில் தற்போதும் அது அரச காணியாக காணப்பட்டு வருகின்றது. எனினும் குறித்த காணிக்கு சொந்தம் கோரும் நபர் இக் காணி தனக்குரியதானது என பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு செய்த நிலையில் இதுவரை அவருக்கு காணிக்கான ஆவணங்கள் கொடுக்கப்படாத நிலையிலேயே பொலிசார் காணியை துப்பரவு செய்துள்ளனர்.

இந் நிலையிலேயே காணி உரிமையாளரை அச்சுறுத்தி துப்புரவு செய்ததாகவும் தெரிய வருவதோடு, குறித்த காணியில் விகாரை ஒன்றை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இது தொடர்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து குறித்த காணியை உரிய நபருக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.

செய்தி – வசந்தரூபன்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

gun shoot
இரத்தினபுரி - கலவான பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
trump
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெயரில் இந்தியாவில் வாக்காளர் அட்டை!
srilanka
தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம்!
mannar
மன்னாரில் கத்தோலிக்க குருவின் உடையில் வந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்ட நபருக்கு நேர்ந்த கதி!
anura
போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார்: ஜனாதிபதி வலியுறுத்தல்
pugi
யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிர்மாய்ப்பு!