அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 2வது திருமணம்.. காதலியை கரம் பிடித்தார்.. செலவு மட்டும் இவ்வளவா?

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலக பணக்காரர் பட்டியலில் வரிசையில் இருப்பவர். இந்நிலையில் 61 வயதான ஜெஃப் பெசோஸ் தனது இரண்டாம் திருமணத்தை வெற்றி கரமாக முடித்துள்ளார்.

தனது நீண்ட நாள் காதலியான 55 வயதாகும் தொலைக்காட்சி பிரபலம் லாரன் சான்செஸ் உடன் அவரது திருமணம் இத்தாலியின் வெனிஸ் நகரில் நேற்று நடந்தது.

கடந்த 3 நாட்களாகவே அவர்களின் திருமண கொண்டாட்டங்களில் சூப்பர் ரிச்சாக 200 விருந்தினர்கள் சூழ நடைபெற்றது.

திருமண செலவு ரூ.430 கோடி என்று கூறப்படுகிறது.

The View, KTTV, Fox உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் தொகுப்பாளராக பணியாற்றிய லாரன் சான்செஸ் உடன் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஜெஃப் பெசோஸ் டேட்டிங் செய்து வருகிறார்.

ஜெஃப் பெசோஸ் தனது முதல் மனைவி மெக்கன்சி ஸ்காட் – ஐ கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். விவாகரத்தின்மூலம் ஜெஃப் பெசோஸ் வைத்திருந்த கணிசமான பங்குகளை பெற்று மெக்கன்சி ஸ்காட் பில்லியனர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

177d533f-562e-4df3-b574-d98d574432e5
வவுனியாவில் கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்பு!
New Project t (3)
உலகில் உயர்ந்த வாகன விலையை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை!
New Project t
கனடாவில் பொலிசாரால் தேடப்படும் தமிழ் இளைஞன்!
mullaithevu-boy-issue
முல்லைத்தீவு இளைஞனின் சர்ச்சைக்குரிய மரணம்...! பொலிஸ் ஊடக பிரிவினரால் வெளியிடப்பட்ட அறிக்கை
New Project t (4)
முல்லைதீவில் இளைஞன் தாக்கப்பட்டு மரணமடைந்தமை தொடர்பில் NPP யின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட அறிவிப்பு!
mullaithevu
முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்: இராணுவத்தினர் மீது அதிரடி நடவடிக்கை. 5 இராணுவத்தினர் கைது