பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்குத் தடுப்புக் காவல் உத்தரவு!

கட்டுநாயக்க பகுதியில் பொலிஸ் அதிகாரியுடன் போராடி, அவரது கடமை நேர துப்பாக்கியைப் பறித்து துப்பாக்கி பிரயோகத்தை நடத்திவிட்டுத் தப்பியோடிய நிலையில் கைதான நபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

சந்தேகநபர் இன்று (16) மினுவாங்கொடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. 

நேற்று (15) பிற்பகல் தேவமொட்டாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 

எவ்வாறாயினும், அவர் பொலிஸ் காவலில் இருந்த போது, பிரதான வீதியில் வைத்து பொலிஸ் அதிகாரி ஒருவருடன் முரண்பட்டு, அந்த அதிகாரியின் துப்பாக்கியைப் பறித்துள்ளார். 

பின்னர் பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச் பிரயோகம் நடத்தி விட்டு, குறித்த துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் அவர் தப்பியோடியுள்ளார். 

தப்பியோடிய சந்தேகநபரைக் கைது செய்வதற்காக நேற்றிரவே பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு விசேட தேடுதல் நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டது. 

இதற்கமைய செயற்பட்ட நீர்கொழும்பு கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், திவுலப்பிட்டி பகுதியில் வைத்து சந்தேகநபரைக் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட போது சந்தேகநபரின் வசம் இருந்த 31 கிராம் ஐஸ் போதைப்பொருள், கொள்ளையடிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி மற்றும் தப்பியோடப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திவுலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

srilanka weather
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி: 6-ஆம் திகதிக்குப் பின் மீண்டும் கனமழை எச்சரிக்கை!
gotabaya rajapaksa
கோட்டாபயவின் மனு பரிசீலனை நிறைவு: தீர்ப்பு செப்டெம்பர் 22-க்கு ஒத்திவைப்பு!
electricity bill
மின் கட்டணத்தில் மாற்றமில்லை: பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
mahaweli river
அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை: பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு!
Mahara Prison
போதைப்பொருள் தட்டுப்பாடே காரணம்? மஹர சிறைச்சாலையில் ரூ.15 கோடி சேதம் — அதிர்ச்சி தகவல்கள்!
Pujith Jayasundara
"அரசியல்வாதிகளை நம்பினால் பூஜித்திற்கு நடந்ததே நடக்கும்": பொலிஸ் உயர்மட்ட 'வாட்ஸ்அப்' உரையாடலில் வெளிவந்த தகவல்!