தகவல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தில், செயற்கை நுண்ணறிவு தளங்கள் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. சாட்ஜிபிடி, குரோக், ஜெமினி ஏஐ போன்ற பல்வேறு ஏஐ கருவிகள் பயன்படுத்தப்பட்டாலும், ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி தான் அதிகளவில் மக்களிடையே ஆதரவு பெற்றுள்ளது.
சாதாரண தகவல்களிலிருந்து தொழில்நுட்பம், மருத்துவம் வரை பல்வேறு துறைகளில் சந்தேகங்களை விரைவாகத் தீர்க்கும் திறன் காரணமாக, இணைய பயனர்கள் சாட்ஜிபிடியை பெரிதும் நாடி வருகின்றனர்.
ஆனால், இந்த ஏஐ பயன்பாடு குறித்து நிபுணர்கள் சில கவலைகளை முன்வைத்து வருகின்றனர். மனிதனின் சுய சிந்தனை மற்றும் நினைவாற்றலை இது பாதிக்கக்கூடும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (MIT) நடத்திய ஆய்வில் வெளியான தகவல்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சாட்ஜிபிடி போன்ற ஏஐ கருவிகளை தொடர்ந்து பயன்படுத்தும் நபர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டது.
அதில் தெரிய வந்தது என்னவென்றால்:

சாட்ஜிபிடி பயன்படுத்தும் நபர்களின் சிந்திக்கும் திறன் சுமார் 47% குறைவடைந்துள்ளது
சிறிய தகவல்களையும் சில நிமிடங்களில் மறந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது
மாறாக, ஏஐ பயன்பாடு இல்லாமல் இயற்கையாக எழுதும் நபர்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட்டதாக தெரியவில்லை
இந்த தகவல்கள், செயற்கை நுண்ணறிவு மிகைப்படுத்தப்பட்ட பயன்பாடு, மனித மூளையின் இயல்பு செயல்பாடுகளைத் தடுக்கும் அபாயம் இருப்பதை வெளிப்படுத்துகின்றன.
ஏஐ கருவிகளை பயனுள்ளதாக பயன்படுத்துவது நன்மை தரும். ஆனால், அவற்றில் முழுமையாக சார்ந்து சிந்தனைக்கு இடமின்றி செயல்படுவது, மனித அறிவாற்றலுக்கே சவாலாக மாறும் என்பதையே இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.